நமது முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக
இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து
தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ
அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச்
செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து
வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம்
காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும்.
அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத்
தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.