பார்க்க வேண்டிய இடங்கள் ( local site seens )
2.சாக்சி ஹனுமன்
3.ராமர் தீர்த்தம்
4.லக்ஷ்மன் தீர்த்தம்
5.சீதா தீர்த்தம்
6.ஐந்துமுக ஆஞ்சநேயர்
7.கொதண்டராமர் கோவில்
8.தனுஸ்கோடி .
9.வில்லுன்டி தீர்த்தம்
10.விவேகாநந்தர் பாறை
11. பாம்பன் பாலம் .
12.அபே ஆஞ்சநேயர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நகரம் இருக்கிறது. இது பாம்பன் தீவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை மன்னார் தீவு, உள்ளது..,இந்திராகாந்தி பாலம் (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்திற்கு சென்னை மதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் இரயில் போக்குவரத்து இருக்கிறது . இராமேஸ்வரம் இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ .பி .ஜே .அப்துல்கலாம் பிறந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது. ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
காமெரா கொண்டு செல்வது பாதுகாப்பு இல்லை மற்றும் போட்டோ எடுப்பது சற்று சிரமம் என்பதால், அங்கு சுற்றி திரியும் போட்டோகிராபர் ஒருவரிடம் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். (விலை ருபாய் ஐம்பது). கடலின் ஆரம்பம் சற்றே அழுக்கை இருப்பது போல் தோன்றினாலும் தைரியமாய் உள்ளே இறங்கி குளிக்கலாம் ஜாக்கிரதையாக. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருபத்தி இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.ராமன் ஒரு சத்ரியன், ராவணன் ஒரு பிராமணன். பிராமணனைக் கொன்ற பிரம்ம்ஹத்தி தோஷம் நீங்க சிவனை ராமன் வழிபட்டதால் ராம ஈஸ்வரம். ராமன் வழிபட்ட சிவனை, இருபத்தி இரண்டு தேவதைகள் தங்களுக்கென தனித் தனி தீர்த்தங்கள் அமைத்து அவற்றில் இருந்து நீர் எடுத்து வழிபட்டு வருவதாக நம்பிக்கை. அந்த தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். சந்-தோசம் பெருகும்.
தீர்த்தங்களின் பெயர்கள்
- மகாலட்சுமி தீர்த்தம்
- சாவித்திரி தீர்த்தம்
- காயத்ரி தீர்த்தம்
- சரஸ்வதி தீர்த்தம்
- சங்கு தீர்த்தம்
- சக்கர தீர்த்தம்
- சேதுமாதவ தீர்த்தம்
- நள தீர்த்தம்
- நீல தீர்த்தம்
- கவய தீர்த்தம்
- கவாச்ச தீர்த்தம்
- கந்தமாதன தீர்த்தம்
- பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்
- சர்வ தீர்த்தம்
- சிவா தீர்த்தம்
- சத்யமிர்த்த தீர்த்தம்
- சந்திர தீர்த்தம்
- சூரிய தீர்த்தம்
- கங்கா தீர்த்தம்
- யமுனா தீர்த்தம்
- கயா தீர்த்தம்
இங்கே வங்கக்குடாக் கடலும் வங்க விரிகுடாக்கடலும் ஒருங் கிணைந்து சங்கமம் ஆவதால் இது ஒரு புனித தீர்த்தக் கட்ட மாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தக்கடற்ரையில் காலை நேரத்தில் சூரிய உதயத்தையும் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். ஆடி, தை, அமாவாசை நாள்களில் இங்கு உள்ள கடலில் நீராடி எழுவது பிதிர்களுக்கு ஏற்ற புண்ணியமாகக் கருதப்படுகிறது. தனுஷ்கோடி ஒவ்வொரு இந்தியனும் ஏன் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய இடம். அவ்வளவு அழகு அவ்வளவு அருமை.தனுஷ்கோடி செல்லும் பாதையில் நம் இரு பக்கமும் கடல் விரிகிறது. ஒரு பக்கம் வங்காள விரிகுடா இன்னொரு பக்கம் இந்தியப் பெருங்கடல். இங்கே இன்னும் ஒரு ஆச்சரியம் நிறைந்த இறைவனின் படைப்பை எண்ணி வியக்கலாம். அதனை இன்னும் ஒரு சில வரிகளில் சொல்கிறேன்.
கடல்
நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. சென்னை திருச்செந்தூர் கன்னியாகுமரி
என்று எங்குமே இல்லாத கடலை இங்கு பார்க்கலாம். கடலின் அழகும், பரந்து
விரியும் கடற்கரையும் கவிதை பேசுகிறது. காமிராக் கண்களுக்கு ஏற்ற
விருந்து. தனுஷ்கோடியின் மிக
முக்கியமான சிறப்பு என்னவென்றால் இங்கே வங்காள விரிகுடாவும், இந்தியப்
பெருங்கடலும் ஒரே இடத்தில சங்கமிகின்றன. வங்காள விரிகுடா பெண்கடல்.
இந்தியப் பெருங்கடல் ஆண் கடல். சாதுவான பெண் கடல் அலைகள் ஏதுமின்றி
அமைதியாய் ஒருபக்கமும். ஆற்பரிக்கும் ஆண்கடல் மிரட்சியாய் அதன் அருகிலும்
காட்சியளிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஏகாந்த ராமர் கோயில்.........
கருவறையில் அமைந்துள்ள ராமர், லட்சுமணர், சீதாபிராட்டி, அனுமர் ஆகியோர்களது திருமேனிகள் கல்லில் சிறப்பாக வடிக்கப்பட்டு நாள் தோறும் பூஜை செய்யப்படுகின்றன. ராமரது அருகில் நிற்கும் அனுமன் மிகவும் பணிவுடன் ராமனது வார்த்தைகளைக் கைகட்டி வாய் புதைத்துக்கேட்பது போன்ற அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
கோதண்டராமர் கோவில்......
தனுஷ்கோடியில் இருந்து வரும் வழியில் இருக்கிறது கோதண்டராமர் கோவில். ராமன் விபீஷணனுக்கு இங்கு தான் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாக கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் இந்தக் கோவிலை கடல் சூழ்ந்து இருந்ததாகவும், இப்போது பல மீட்டர்கள் பின் சென்று விட்டதாகவும்
ராமர் பாதம். ராமர் இங்கு இருந்து தான் இலங்கையை முதன் முறையாகப் பார்தரம். அது ஒரு சிறிய குன்று. ராமேஸ்வரத்தின் மொத்த காட்சியையும் இங்கிருந்து காணலாம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இங்கே ராமர் பாலம் கட்ட உதவிய மிதக்கும் கற்களை வைத்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயருக்காக முப்பது வருடங்களுக்கும் மேல் எரியும் அணையா விளக்கு ஒன்று உள்ளது.
ராமநாதசுவாமி கோவில். சீதை செய்த மணலால் செய்த லிங்கம். ராமனால் வழிபடப்பட்ட லிங்கம், அனுமன் வாலை அறுத்த லிங்கம் அகஸ்தியரால் போற்றப்பட்ட லிங்கம் என்று இந்த லிங்கத்திற்கு பல சிறப்புக்கள் உள்ளன.