பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தேவிபுரம், தேவிப்பூர்
ஊர் : தேவிபட்டினம்
மாவட்டம் : ராமநாதபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள். இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பாண பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும் அளித்தார்கள். ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.
ராவண வதத்திற்கு முன் ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் ராமநாதபுரம் அருகிலிலுள்ள உப்பூர் விநாயகரை தரிசித்துவிட்டு, வீரசக்தி பீடமான இத்தலத்தில் தங்கி அம்மனை வணங்கி ஆசி பெற்று சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.